Enable Javscript for better performance
திருமாநிலையூர் நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருமாநிலையூர் நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

    By DIN  |   Published on : 08th October 2016 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூர், திருமாநிலையூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    முகாமைப் பார்வையிட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ், மேலும் பேசியது:
    ஆசிரியர் பணி புனிதமான பணி, நேரம் காலம் கருதாமல் சேவை உள்ளத்தோடு பணியாற்ற வேண்டும். மாணவ, மாணவிகள் வருகை விவரம் அறிந்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாணவ,மாணவிகளின் கல்வி மேம்பாடு மற்றும் சுகாதாரம் குறித்து தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    பின்னர் மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவ,மாணவிகளிடம் கலந்துரையாடி, சரியாக பதிலளித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
    நிகழ்ச்சியில் கரூர் நகராட்சி ஆணையர் அசோக் குமார், சுகாதாரத் துறையின் துணை நளினி, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், வட்டாட்சியர் துரைசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai