Enable Javscript for better performance
நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கரூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவுப் பணிகள் குறித்து ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
    கரூர் சுங்ககேட் அருகில் கழிவுநீர் கால்வாயை ஆய்வு செய்த அவர், திருச்சி சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்பை தூர் வார உத்தரவிட்டார். பணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து,கழிவுகளை உடனே அப்புறப்படுத்த அறிவுறுத்தினார்.
    மேலும், கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமை பார்வையிட்டு அப்பகுதியினரிடம் சுற்றுப்புறத் தூய்மை,நிலவேம்பு கசாயம் அருந்தவும்,காய்ச்சல் இருப்பின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகவும் கேட்டுக் கொண்டார்.
    அப்போது, அப்பகுதி பொதுமக்கள் குப்பைத் தொட்டி வேண்டும் என்றனர். இதையடுத்து, அப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது. மேலும்,சுங்ககேட் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே வேகத்தடைகள் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
    ஆய்வின் போது கரூர் நகராட்சி ஆணையர் அசோக் குமார், சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் நளினி, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், வட்டாட்சியர் துரைசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai