Enable Javscript for better performance
அனுமதியின்றி முற்றுகை போராட்டம்: 30 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி முற்றுகை போராட்டம்: 30 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

    By DIN  |   Published on : 15th October 2016 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனுமதியின்றி மணல்குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியதாக காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் 30 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கரூர் மாவட்டம், தளவாபாளையத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடம்பன்குறிச்சி மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது.
    இப்போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதும் இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைமை நிலைய செயலாளர் சூரியமூர்த்தி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்பட சுமார் 400 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
    இந்நிலையில் அனுமதியின்றி முற்றுகைப் போராட்டம் நடத்தியாக புஞ்சை தோட்டக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மாரியம்மாள் வியாழக்கிழமை வேலாயுதம்பாளையம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் முகிலன், அண்ணாவேலு, சண்முகம், விஸ்வநாதன் உள்பட 30 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai