Enable Javscript for better performance
சரக்கு, சேவை வரிவிதிப்பில் வரி ஏய்ப்பு செய்ய முடியாது- Dinamani

சுடச்சுட

    

    சரக்கு, சேவை வரிவிதிப்பில் வரி ஏய்ப்பு செய்ய முடியாது

    By DIN  |   Published on : 15th October 2016 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜிஎஸ்டி எனும் சரக்கு,சேவை  வரிவிதிப்பு நடைமுறைக்கு வரும்போது வணிகர்கள் யாரும் வரி செலுத்தாமல் அரசை ஏமாற்ற முடியாது என்றார் தமிழ்நாடு தொழில் வர்த்தக முதுநிலை தலைவர் எஸ். ரத்தினவேலு.
    கரூரில் இளம் தொழில்முனைவோர் மையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது: மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) போன்று விரைவில் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரவுள்ளது.
    இது வாட் வரியின் விரிவாக்கம் எனலாம். இது மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி என 3 வடிவங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வணிகர்கள் எந்த விதத்திலும் வரி செலுத்தாமல் அரசை ஏமாற்ற முடியாது. ஏனென்றால் ஒரு பொருளை விற்றாலோ? வாங்கினாலோ? அந்தப் பொருள் என்ன விலைக்கு விற்றப்பட்டது? வாங்கப்பட்டது? வரியின் சதவீதம் என்ன? என்பதை அரசின் இணையதளம் காண்பித்து விடும். அனைத்து வணிகரின் டின் எண் அரசின் இணைய தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, வரி செலுத்தாதவர்கள் வணிகத்தை முடக்கி விடும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    மாநில அளவிலான வரியில் மாநில மதிப்பு கூட்டு வரி அல்லது விற்பனை வரி, கேளிக்கை வரி, சுங்க வரி மற்றும் நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, லாட்டரி மற்றும் சூதாட்ட வரி ஆகியவை அடங்கும்.
    விரைவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதம் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முடிவு எடுக்கப்படும் என்றார். கருத்தரங்கில் வணிகர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai