Enable Javscript for better performance
சேங்கல்மலை வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    சேங்கல்மலை வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

    By DIN  |   Published on : 15th October 2016 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேங்கல்மலை வரதராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
    கரூர் மாவட்டம், சேங்கல்மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணியளவில் சுவாமிக்கு புன்யாக வாசனை மற்றும் உற்சவர் திருமஞ்சனம், திருமாங்கல்ய தாரணம் ஆகியவை நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு காசியாத்திரை, மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஹோமம், ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் உபசாரம், தீபாராதனை, தேங்காய் உருட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai