Enable Javscript for better performance
தீபாவளி பண்டிகை: 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: எஸ்.பி தகவல்- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளி பண்டிகை: 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: எஸ்.பி தகவல்

    By DIN  |   Published on : 15th October 2016 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி பண்டிகையின்போது நகரின் முக்கியப் பகுதிகளில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரன்.
    சியாரா இரு சக்கர வாகன ரோந்துப் படைப்பிரிவை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:
    நகரில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே ரோந்துப் பிரிவு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தற்போது இரு சக்கர வாகன ரோந்துப் பிரிவு கூடுதலாகத் தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதி வேகமாக வாகனம் ஓட்டுதல்,  உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இதுவரை 86,220 வழக்குகளுக்கு ரூ.1.75 கோடிக்கு அபராதம் வசூலித்துள்ளோம்.
      தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் ஜவஹர் பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் திருடர்களைக் கண்காணிக்க 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளோம். மேலும் உயர் கோபுர கண்காணிப்பு மேடை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். அரவக்குறிச்சியில் சாலை போக்குவரத்து ஒழுங்குப்படுத்த புதிதாக போக்குவரத்து பிரிவு செயல்பட உள்ளது. வெள்ளியணையில் திருட்டு வழக்கில் பிடிபட்ட இளைஞர், நீதிமன்ற உத்தரவின் படி, போக்குவரத்து ஆய்வாளருடன் சேர்ந்து போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். நிகழாண்டில் இதுவரை 73 சதவீதக் குற்றங்களை கண்டுபிடித்துள்ளோம் என்றார்.
    பேட்டியின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோ மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai