Enable Javscript for better performance
பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கரூர் ஜவஹர் பஜாரைச் சேர்ந்தவர் நிர்மலா (47). இவரது அக்காள் மகன் ஆறுமுகம் (38). இவருக்கு அண்மைக்காலமாக மனநிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது.
    இந்நிலையில்,வெள்ளிக்கிழமை காலை ஆறுமுகத்தை நிர்மலா அழைத்துக் கொண்டு கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள காமாட்சியம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் சாமி கும்பிட்ட போது,  திடீரென கோயிலுக்குள் இருந்த தேங்காய் வெட்டும் அரிவாளை எடுத்து நிர்மலாவின் கையை வெட்டியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆறுமுகத்திடம் இருந்த அரிவாளை பிடுங்கினர். தகவலறிந்த கரூர் நகர போலீஸார் விரைந்து வந்து ஆறுமுகத்தைச் கைது செய்தனர். காயமடைந்த நிர்மலாவை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தினர். வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai