Enable Javscript for better performance
மாவட்ட மைய நூலகருக்கு சிறந்த பொது நூலகர் விருது- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்ட மைய நூலகருக்கு அப்துல்கலாம் சிறந்த பொது நூலகர் விருது சென்னையில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
    சென்னையில் குருநானக் கல்லூரி நூலகத்துறை மற்றும் கலாம் சிந்தனைப் பேரவை, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் சமூகம் ஆகியவை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய நூலகக் கருத்தரங்கில் கரூர் மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவக்குமாரின் சீரிய நூலகப் பணிக்காக அவருக்கு டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறந்த பொது நூலகர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.  விருதினை திரைப்பட இயக்குநர்கள் ராஜு முருகன், பாண்டிராஜ் ஆகியோர் வழங்கினர்.
    இதையடுத்து அவருக்கு கரூர் மாவட்ட நூலக அலுவலர் மு.பழனிச்சாமி மற்றும் நூலகர்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai