Enable Javscript for better performance
வெள்ளியணை அரசு பள்ளியில் அப்துல்கலாம் துளிர் இல்லம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளியணை அரசு பள்ளியில் அப்துல்கலாம் துளிர் இல்லம் தொடக்கம்

    By DIN  |   Published on : 15th October 2016 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் துளிர் இல்லம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
    விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சி. தமிழரசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களின் அறிவியல் மாதிரிகளை பார்வையிட்டார். மாவட்ட செயலாளர் ஐ. ஜான் பாட்சா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ. கருப்பண்ணன், துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் பட்டதாரி ஆசிரியர் பெ. தனபால் ஆகியோர் வாழ்த்திபேசினர். பள்ளி ஆசிரியர் து. கவிதா நன்றி கூறினார். துளிர் இல்லத்தின் தலைவராக மாணவர் ம. ஹரிஹரன், செயலாளராக கி. சந்தோஷ் குமார், பொருளாளராக ஆ. லோகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai