Enable Javscript for better performance
வேன் மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கேரள மாநிலம் பாலக்கோடு நாகிரிபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (67). இவர், கரூரில் உள்ள தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார்.
    வியாழக்கிழமை காலை வெங்கமேடு தண்ணீர் தொட்டி அருகே பழைய கரூர் - சேலம் புறவழிச்சாலையைப் பிரபாகரன் கடக்க முயன்ற போது, அவ்வழியே வெங்கமேடு சண்முகசுந்தரம் மகன் நந்தகுமார் (21) ஓட்டி வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai