Enable Javscript for better performance
வேலம்பாடி ஊராட்சியில் சுகாதாரப் பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், வேலம்பாடி ஊராட்சி, பாப்பநாயக்கன்பட்டி மற்றும் கேர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    ஆய்வின் போது ஆட்சியர் கூறியது: பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க அரசு நிதியுதவியுடன் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டித்தரப்படுகிறது. அதன்படி,வேலம்பாடி ஊராட்சி,பாப்பநாயக்கன்பட்டியில் 40 இல்லங்களுக்கு கழிப்பறைகள் கட்டும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. மேலும்,கேர் நகர் பகுதியில் ரூ.2.60லட்சம் மதிப்பில் கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் சுகாதாரக் கேடின்றி, பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து இப்பகுதி மக்களின், நியாயவிலைக் கடை,சிறிய அளவிலான பூங்கா கோரிக்கைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
    பின்னர், அணைப்பாளையம் மழையளவுமானியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை 120 மி.மீ அளவு என பதிவாகி இருந்ததால், அப்பகுதி கால்வாயின் கரையோரத்தை பலப்படுத்தும் பணிகள் குறித்து பார்வையிட்டார்.
    ஆய்வின் போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், அமராவதி ஆற்று பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், வட்டாட்சியர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தண்டபாணி, செல்வி, ஒன்றியப்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai