Enable Javscript for better performance
17, 18-ல் விவசாயிகள் ரயில் மறியல்: மக்கள் நலக்கூட்டணியினர் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    17, 18-ல் விவசாயிகள் ரயில் மறியல்: மக்கள் நலக்கூட்டணியினர் ஆதரவு

    By DIN  |   Published on : 15th October 2016 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 17,18 ஆம் தேதிகளில் விவசாய சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
    மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ம.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
    ம.தி.மு.க மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
    இதில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சண்முகசுந்தரம், பி.ராஜூ, எம்.ஜோதிபாசு, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ரெங்கராஜ், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் கே.கே. பெரியசாமி,விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், நொய்யல் பாசன விவசாய நல சங்க தலைவர் நொய்யல் ராமசாமி, கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai