அரவக்குறிச்சி காசி விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு புதன்கிழமை காலை சிறப்பாக
Updated on
1 min read

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு புதன்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, கோவை கூனம்பட்டி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ நடராஜ சுவாமிகள் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக, நான்கு கால யாக பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. விநாயகர், சூரியபகவான், சுப்ரமணியர், பைரவர், சனீஸ்வரர், சந்திர பகவான், நவக்கிரஹ சன்னதி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் சன்னதிக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com