கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவியாளராகப் பணியாற்ற நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
குளித்தலை அருகேயுள்ள ஆனைகவுண்டனூர் கந்தன்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த 2014, செப்டம்பரில் காதலிப்பதாகக் கூறி, பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சிறார்களுக்கான வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிறுவனை கைது செய்து கரூர் இளைஞர் நீதிமன்ற குழுமத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பலாத்காரத்தில் ஈடுபட்ட சிறுவன் குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவியாளராக ஜூன் 21 ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு பணியாற்ற வேண்டும் என பொறுப்பு நீதிபதி மோகனவல்லி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.