ஸ்டாலின் கைது: மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 199 பேர் கைது

சென்னையில் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மறியலில்
Updated on
1 min read

சென்னையில் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்ளிட்ட 199 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் திமுக மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 70 பேர், குளித்தலையில் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 34 பேர், வேலாயுதம்பாளையத்தில் திமுக நிர்வாகி சாமிநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 1 பெண் உள்ளிட்ட 43 பேர், சின்னதாராபுரத்தில் க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் கே. கருணாநிதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 42 பேர், மாயனூரில் திமுக நிர்வாகி ரவிராஜா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் என மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் 18 பெண்கள் உள்ளிட்ட 199 பேரை போலீஸார் கைது செய்தனர்.  
கரூர் வெங்கமேட்டில் கரூர் வடக்கு நகர அவைத் தலைவர் கே.எம். பெரியசாமி தலைமையிலும், உப்பிடமங்கலத்தில் தாந்தோணி ஒன்றியச் செயலாளர் எம்.ஆர். ரகுநாதன் தலைமையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com