நாளை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு: மாவட்ட மைய நூலகத்தில் நகல் பெற ஏற்பாடு

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 19) வெளியிடப்பட உள்ளதை முன்னிட்டு, தேர்வு முடிவுகளை காண்பதற்கும், நகல் பெறவும் மாவட்ட மைய நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 19) வெளியிடப்பட உள்ளதை முன்னிட்டு, தேர்வு முடிவுகளை காண்பதற்கும், நகல் பெறவும் மாவட்ட மைய நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மைய நூலகர் செ.செ. சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. இந்த முடிவுகளை கரூர் மாவட்ட மைய நூலகத்தில் உள்ள இணையதள பிரிவில் அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளவாறு 19-ம் தேதி காலை 10 மணிக்கு மாணவ, மாணவிகள் பார்க்கவும், நகல்பெறவும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை 10-ம் வகுப்பு  மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com