உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியினர் தயாராக வேண்டும் என்றார் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
கரூரில் பாஜக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
தமிழகத்தில் பாஜக மீது மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்கள் பெரிய மாற்றத்தை விரும்புகிறார்கள். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கட்சியில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். வீடுகள்தோறும் சென்று மத்தியில் மோடி அரசின் செயல்பாடுகளை விளக்கிக் கூற வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றார்.
மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர்கள் நகுலன், கிருஷ்ணமூர்த்தி, கைலாசம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர்கள் எம்.என். ராஜா, சக்கரவர்த்தி, கோட்டப் பொறுப்பாளர் சிவசுப்ரமணி, இணைப் பொறுப்பாளர்கள் கே. சிவசாமி, இல. கண்ணன், இணை பொறுப்பாளர் திருமலைபாலாஜி உள்ளிட்டோர் பேசினர். இளைஞரணிச் செயலர் கோபிநாத், மாவட்டச் செயலர் மோகன் உள்ளிட்ட திரளான கட்சியினர் பங்கேற்றனர். நகரத் தலைவர் செல்வன் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.