அக்.7-இல் கறவை மாடுகள் இனப்பெருக்க கருத்தரங்கம்

கரூரில் வரும் 7-ஆம் தேதி கறவை மாடுகள் இனப்பெருக்க வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

கரூரில் வரும் 7-ஆம் தேதி கறவை மாடுகள் இனப்பெருக்க வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
 கரூர் மண்மங்கலம் பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் பி.வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 கரூர் பிரேம் மகாலில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. கறவை மாடுகளில் குறிப்பாக கலப்பின மாடுகளில் சினைப்பிடித்தல் குறைவாக காணப்படுகிறது. இதனால் அவற்றின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. வருடம் ஒரு கன்று பெறுவது, அடர் தீவனம், பசுந்தீவனம், தாது உப்புக்களின் பங்கு, கறவைமாடுகளுக்கு ஊறுகாய் புல் தயாரிப்பு,  உள்ளூரில் கிடைக்கும் தீவனப் பொருள்களைக்கொண்டு குறைந்த செலவில் அடர்தீவனம் தயாரித்தல், குறைந்த செலவில் சமச்சீர் தீவனம் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் 7339057073 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com