கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியருக்கு இளம் பொருளியல் வல்லுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழ்நாடு பொருளாதார வல்லுநர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் பொருளாதார வல்லுநர் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில், கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதுகலை மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் துறையில் உதவிப்பேராசிரியராக பணியாற்றும் முனைவர் என்.முகுந்தனுக்கு தமிழ்நாடு பொருளியல் வல்லுநர் கூட்டமைப்பின் தலைவர்அருட்தந்தை ஏ.ஜி.லியோனோடு இளம்பொருளியல் வல்லுநர் விருது வழங்கி கௌரவித்தார்.
சமூக, பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டது மற்றும் மாநில, தேசிய கருத்தரங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தது ஆகியவற்றுக்காக பேராசிரியர் என்.முகுந்தனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.