தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே தேசிய அளவிலான ஜூடோ போட்டி, ஹைதராபாதில் கடந்த 8-ஆம்தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தென்மண்டலம் சார்பில் 8 மாநிலங்களை உள்ளடக்கிய பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் இருந்து 12 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், 5-ம் வகுப்பு மாணவி அட்சயா 11 வயதுக்குட்பட்டோருக்கான 30 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவியையும், பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் கரூர் மாவட்ட ஜூடோ சங்கம் மற்றும் கரூர் பரணிபார்க் கல்விக்குழும நிர்வாகம் சார்பில் பாராட்டப்பட்டனர்.
விழாவுக்கு பரணிபார்க் கல்விக்குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் பிரியா உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.