கரூர் வழியாக தூத்துக்குடி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காலையில் சேலத்தில் இருந்து புறப்பட்டார்.
வழியில் கரூர் வந்த அவர் மதுரை-சேலம் பைபாஸ் சாலையில் உள்ள திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், கும்பமரியாதை அளித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.திருவிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவண்ணன், கரூர் ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.