அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

கரூர் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் சமூகச் சிற்பி விருது வழங்கப்பட்டது.
Updated on
1 min read

கரூர் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் சமூகச் சிற்பி விருது வழங்கப்பட்டது.
 கல்வியால் மாற்றங்களை உருவாக்குவோம் என்ற நோக்கில் அசத்தல் அரங்கம் 2017 என்ற தலைப்பில் திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் கல்வியாளர்கள் சங்கம் கற்போரையும், கற்பிப்போரையும் சிறப்பிக்கும் வகையில் தமிழக அளவில் சிறந்த 50 ஆசிரியர்களைத் தேர்வு செய்து சமூக சிற்பி விருதை அண்மையில் வழங்கியது.
இதில் கரூர் வெள்ளியணை அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும்  பெ. தனபால் பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கும் வகையில் குழு அமைத்து அறிவியல் கண்காட்சி, வினாடிவினா, அறிவியல் நாடகம், ஆய்வுக் கட்டுரை உள்ளிட்டவை  மூலம் அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அவரை கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன் வாழ்த்தினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சி. தமிழரசன், அனைவருக்கும் கல்வித் திட்ட உதவி அலுவலர் பெ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com