Enable Javscript for better performance
கரூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
    கரூரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளுதல், பெயர் நீக்கம், சேர்த்தல் மற்றும் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாகப் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.
    பேரணியை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தொடக்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று திருவள்ளுவர் மைதானத்தை அடைந்தது.  இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.  முன்னதாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை அகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 2018-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் கரூர், குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
    18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இதுவரை தங்களது பெயர்களை பதிவு செய்யாதவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது. வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர். பேரணியில், கரூர் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, கரூர் வட்டாட்சியர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai