Enable Javscript for better performance
நரிக்குறவர் காலனியில் டெங்கு தடுப்புப் பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நரிக்குறவர் காலனியில் டெங்கு தடுப்புப் பணிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 22nd October 2017 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூர் அரசு காலனி மற்றும் நரிக்குறவர் குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஆய்வின்போது அமைச்சர் கூறுகையில், டெங்கு தடுப்புப் பணிகளான சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது, தண்ணீரில் குளோரினேசன் செய்வது உள்ளிட்ட பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கூடுதலாக பொதுமக்களும் தங்கள் பகுதியை சுகாதாரமாக வைத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
    டெங்கு குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் நிலவேம்பு கசாயத்தை பருகியும், உரிய மருத்துவப் பரிசோதனை பெற்றும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டும் டெங்கு நோய் பாதிப்பை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
    ஆய்வின்போது, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா மணிவண்ணன்,  மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ்,  மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் நளினி, கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஏ.ஆர். காளியப்பன், வை. நெடுஞ்செழியன், மார்கண்டேயன், டிஎன்பிஎல் பேரூராட்சி முன்னாள் தலைவர் கமலக்கண்ணன்,  கரூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தானேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai