திருச்சி மண்டல அளவிலான ஓவியப் போட்டியில் பரணி வித்யாலயா பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.
ஸ்ரீ ராம் இலக்கிய கழகத்தின் திருச்சி மண்டல அளவிலான ஓவியப் போட்டிகள் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 300 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் கரூர் பரணி வித்யாலயா மாணவி காரல் சரோன் முதல் பரிசு வென்றார். அதே பிரிவில் ஜசிந் மூன்றாம் பரிசும், செனிடா ஆறுதல் பரிசு பெற்றனர்.
9 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் மாணவர் தியனேஷ்வர் இரண்டாம் பரிசு வென்றார்.
ஓவியப் போட்டியில் பல்வேறு பரிசுகளைப் பெற்று பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார்.செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன், நிர்வாக அலுவலர் எம்.சுரேஷ், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.