கரூர் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டன.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சங்கர்(28). இவர் கடந்த 2013, 2014 ஆம் ஆண்டுகளில் கரூர் நகர் பகுதிகளில் பல்வேறு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண்-1 இல் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றவாளி சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி மோகனவள்ளி உத்தரவிட்டதையடுத்து சங்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.