துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கோரி மனு

அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
1 min read

அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேரவை மாவட்டச் செயலர் இரா. முல்லையரசு தலைமையில் ஆட்சியரிடம் அண்மையில் அளித்துள்ள மனு:
தமிழக உள்ளாட்சிகளில்  ஏறத்தாழ 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் பொது சுகாதாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் நிரந்தர பணியாளர்கள்,  தினக்கூலி பணியாளர்கள், காலமுறை ஊதிய பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 60,000-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 
இந்த பொது சுகாதாரப்பணி என்பது தினந்தோறும் குப்பைகளோடு கலந்துவரும் மனிதக்கழிவுகளையும், இறந்த தாய், எலி போன்றவற்றை  அப்புறப்படுத்துவதும் இந்த துப்புரவு பணியாளர்கள்தான். மேலும் அபாயகரமான தொற்றுநோய் பரவக்கூடிய மருந்து கழிவுகளும், ஊசிகளும், பெண்கள் பயன்படுத்தக்கூடிய நாப்கின் போன்ற கழிவுகளையும், பொதுவீதியில் அப்புறப்படுத்தியும் வருகிறார்கள். எனவே மத்திய அரசு கூறியுள்ளதுபோலும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலோடு கையால் மலம் அள்ளுவோர் தடைச்சட்டம் 2013-ன்படி தூய்மைப்பணியாளர்களை கையால் மலம் அள்ளுவோர் பட்டியலில் இணைத்து அனைவருக்கும் வழங்க வேண்டிய அடையாள அட்டையை காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com