கரூரில் தமுமுகவினர்  கருப்புச்சட்டையுடன் ஆர்ப்பாட்டம்

கரூரில் தமுமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் தமுமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அன்றைய பிரதமர் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், மசூதி இடிப்புக்கு பிறகு நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான உபி மாநிலத்தின் இன்றைய தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் கோரியபடி மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டிக்கொடுக்க வேண்டும்,  மசூதியை இடித்த குற்றவாளிகள் என சிபிஐ குற்றம்சுமத்தியுள்ளவர்களுக்குஉரிய தண்டனை வழங்கக் கோரியும் பேருந்து நிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எம். உபைதுர்ரகுமான் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. கமர்தீன் சிறப்புரையாற்றினார். 
ஆர்ப்பாட்டத்தில் தமுமுகவின் அன்சாரி,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் ஜெயராமன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com