Enable Javscript for better performance
அங்கன்வாடி, சமுதாயக் கூடத்துக்கு பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்தில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம் கட்டும் பணிகளுக்கான பூமிபூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.
    கரூர் நகராட்சிக்குட்பட்ட 40-வது வார்டு ராயனூரில் ரூ.10 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் அமைக்கவும், 43-வது வார்டு ஒத்தையூர், பால்வார்பட்டி, 48-வது வார்டு பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் தலா ரூ.5 லட்சத்தில் தனித்தனியே 3 சமுதாயக்கூடங்கள் கட்ட என மொத்தம் ரூ.25 லட்சத்தில் 4 பணிகளுக்கு வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று, பூமிபூஜையைத்தொடங்கி வைத்து பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் ப. அசோக்குமார், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் அ. செந்தில், வட்டாட்சியர் அருள், கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், விசிகே. ஜெயராஜ், மல்லிகாசுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai