Enable Javscript for better performance
அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மருத்துவத்துறை பணியாளர்களைப்போல ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்புச்சட்டம் இயற்றக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்டத் தலைவர் தீனதயாளன் , தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் பாலச்சந்திரன் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலர் சு. வேலுமணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். பின்னர் பணி பாதுகாப்பு கேட்டு கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai