Enable Javscript for better performance
'குரூப் 4 தேர்வில் 31 ஆயிரம் பேர் பங்கேற்பர்'- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை 30,725 பேர் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்தார்.
    கரூர் ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட கருவூல பாதுகாப்பு அறையில் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி - 4 க்கான கேள்வித்தாள் இருப்பில் உள்ளதை வியாழக்கிழமை பார்வையிட்ட பின் மேலும் அவர் கூறியது:
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவுள்ள தொகுதி - 4 க்கான போட்டித் தேர்வை கரூர் மாவட்டத்தில் 30,725 பேர் எழுதுகிறார்கள். இவர்களுக்கு 96 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    தேர்வுப் பணியில் 96 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 96 ஆய்வு அலுவலர்கள், 1540 அறை கண்காணிப்பாளர்கள், 19 மண்டல அலுவலர்கள் மற்றும் 15 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    தேர்வெழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதியும், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு கூடங்களில் தரைதளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது.
    கரூர் மையத்தில் ஒரே பெயருடைய பள்ளிகள்
    1. புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் வடக்கு பிரதட்சணம் ரோட்டிலும், புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்தி கிராமத்திலும் உள்ளது. 2. சேரன் மெட்ரிகுலேசன் பள்ளி, ராமகிருஷ்ணபுரத்திலும், சேரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, வெண்ணமலையிலும், சேரன் மேல்நிலைப்பள்ளி, புன்னம் சத்திரத்திலும் உள்ளது என்பதால் தேர்வாளர்கள் தங்களுக்கு உரிய சரியான தேர்வு மையத்தை தேர்வுக்கூட அனுமதி சீட்டில் சரிபார்த்து, சரியான தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.
    மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், மாவட்டக் கருவூல அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai