Enable Javscript for better performance
கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி தயார்- Dinamani

சுடச்சுட

    

    கால்நடை மையங்களில் தயார் நிலையில் 2.0 லட்சம் டோசஸ் வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய் என்பது ஒரு வகை நச்சுயிரியால் ஏற்படும் தொற்று நோய். இந்நோய் தீவனம், குடிநீர், காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது. நோய் கண்ட கோழிகள் வெள்ளையாகவும்,பச்சையாகவும் கழியும். மூச்சுத் திணறல், நடுக்கம், வாதம், சோர்வு மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்தும் காணப்படும். நோய் பாதித்த கோழிகள், தலையை கால்களுக்கு இடையே சொருகிக் கொள்ளும். இந்நோய் தாக்கிய கோழிகளில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும். உரிய வயதில் ( 2 மாத வயதில் ) வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி அளிப்பதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். இந்நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் இரு வாரவிழா நடத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்கென 2.05 லட்சம் டோசஸ் வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி பெறப்பட்டு அனைத்து கால்நடை நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை (9-ம் தேதி) 22-ம் தேதி வரை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை பெரு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம், ஊரக கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலையப் பகுதிகளில் இலவசமாகக் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இத்தடுப்பூசியை 2 மாத வயது முடிந்த கோழிக்குஞ்சுகள் முதல் போடலாம்.
    எனவே விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர் அனைவரும் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசியை இலவசமாகத் தங்கள் கோழிகளுக்குப் போட்டுக்கொண்டு கோழிகளை இறப்பிலிருந்தும் பொருளாதார இழப்பிலிருந்தும் பாதுகாத்து பயனடையலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai