Enable Javscript for better performance
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தந்தை கைது- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தந்தை கைது

    By DIN  |   Published on : 09th February 2018 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூரில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    திண்டுக்கல் மாவட்டம், டி.கூடலூர் கட்டையம் குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாலன், (38), டெய்லர். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வமணிக்கும் (31) 14 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் கரூர் செங்குந்தபுரத்தில் வசித்து வந்த நிலையில் கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக அதே பகுதியில் பிரிந்து வாழ்ந்தனர். அப்போது மகள் தந்தையுடனும், மகன் தாயுடனும் வசித்து வந்தனர். இந்நிலையில் தனது மகளுக்கு கணவர் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுப்பதாக தாய் செல்வமணி புதன்கிழமை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் ஜெயபாலனை போக்சோ சட்டத்தின்கீழ்(குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில்இருந்து தடுக்கும் சட்டம்) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai