Enable Javscript for better performance
விவேகானந்தாநகர், வஉசி தெருவை 6-வது வார்டில் இணைக்க மனு- Dinamani

சுடச்சுட

    

    விவேகானந்தாநகர், வஉசி தெருவை 6-வது வார்டில் இணைக்க மனு

    By DIN  |   Published on : 09th February 2018 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     வார்டு மறுவரையரையில் கரூர் விவேகானந்தா நகர், வ.உ.சி. தெரு பகுதியை 6-வது வார்டில் இணைக்க அப்பகுதியினர் நகராட்சி ஆணையர் ப. அசோக்குமாரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
    மனுவில் கூறியிருப்பது: கரூர் நகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் விவேகானந்தா நகர், வஉசி தெரு ஆகியவை இருந்தது. தற்போது வார்டு மறுவரையரையில் இரு பகுதிகளும் புதிதாக உருவாக்கப்பட்டு 10-வது வார்டு ரிசர்வ் வார்டில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரு பகுதிகளிலும் இந்துக்களில் அனைத்து இனத்தினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இந்நிலையில் இந்த இரு பகுதிகளும் ரிசர்வ் வார்டில் இணைக்கப்பட்டுள்ளதால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மற்ற இனத்தவருக்கு வாய்ப்பு இருக்காது. எனவே இந்த இணைப்பை மறுபரிசீலனை செய்து விவேகானந்தா நகர், வஉசி தெரு ஆகிய இரண்டையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறிய வார்டாகிய நேரு நகர் முதல் கொங்கு நகர் வரையுள்ள அனைத்து இனத்தவரும் வசிக்கும் 6-வது வார்டில் இணைக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai