Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கரூர் வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜே. சிட்டிபாபு தலைமை வகித்தார். மூர்த்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈட்டிய விடுப்புக்கான பணத்தை அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வழங்கிட வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தை தொழிலாளர்களின் சம்பளம், வாகன பராமரிப்பு என பல்வேறு வகையில் முறையீடு செய்யும் ஜிவிகே ஈஎம்ஆர்ஐ நிறுவனத்தின் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்டச் செயலர் லிங்கேஸ்வரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai