நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் திரள வேண்டும்: சி. மகேந்திரன்

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் திரள வேண்டும் என்றார் இந்திய கம்யூ. கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன்.

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் திரள வேண்டும் என்றார் இந்திய கம்யூ. கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன்.
கரூர் மாவட்டம் புஞ்சைபுகழூரைச் சேர்ந்த இந்திய கம்யூ. கட்சியின் மூத்த நிர்வாகியும், கரூர் மாவட்டச் செயலருமான கே.கே. பெரியசாமி இறந்ததையடுத்து புதன்கிழமை நடைபெற்ற அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியது:
தமிழக இயற்கையின் தனித்தன்மையே மேற்குத் தொடர்ச்சி மலைதான். பல நதிகள் உருவாவதற்கும், தமிழகத்தை வளப்படுத்தவும், நீர்நிலைகளை வளப்படுத்தவும் முக்கிய காரணியாக இந்த மலைதான் உள்ளது. இந்த மலையில் கிட்டத்தட்ட 8 லட்சம் டன்னில் இருந்து 10 லட்சம் டன் வரை பாறைகளை உடைத்தெடுக்க 5 லட்சம் முதல் 8 லட்சம் டன் வரை வெடி மருந்துகளைப் பயன்படுத்தும் வகையில்தான் நியூட்ரினோ திட்டம் வருகிறது என்றபோது பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
இதுபோன்ற ஆபத்தான திட்டத்தைத்தான் மத்திய அரசு தருகிறது. இது தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடையே கருத்து கேட்காமல், தேசியளவில் நாங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியான முடிவு எனக் கூறி சர்வாதிகாரப் போக்கு மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தை ஒரு பரிசோதனைக்கூடமாக்க மத்திய அரசு பார்க்கிறது. இதற்கு எதிராக இந்திய கம்யூ. கட்சி கடைசி வரை போராடும்.  பாஜகவாலும், மோடியாலும் கட்டுப்படுத்தப்பட்ட தமிழக  அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை.  அறிவுப்பூர்வமான இளைஞர்களைக் கொண்ட நாடு  இந்தியாதான். எப்படி ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தார்களோ அதேபோல நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் கிளர்ந்தெழுவர். அதற்கான அறைகூவலை இந்திய கம்யூனிஸ்ட் விடுக்கிறது.
எடப்பாடி அரசுக்கு பதிலாக வேறு அரசு இருந்திருந்தால் இந்தத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு இருந்திருக்கும். குரங்கணி தீ விபத்து துயரம் ஆறுவதற்குள் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com