Enable Javscript for better performance
'அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனையாளர்களாக வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனைகள் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்றார் ஆட்சியர் த.அன்பழகன்.
    கரூர் அட்லஸ் கலையரங்கில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் பியூட்சரைசுடு குளோபல் கமிட்டி மற்றும் மைசோ கல்வி நிகழ்நிலை ஆகியவற்றின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி அவர் மேலும் பேசியது:
    பிறப்பில் அனைவருக்கும் சமமான அறிவையே பெற்றிருக்கிறோம். அதனுடைய வளர்ச்சியை ஒவ்வொருவரும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளிப் பருவத்தில் நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் சாதனையாளர்களாக வரவேண்டும் என்பதே இதன் நோக்கம். அரசு பள்ளியில் படிக்கிறோம்; நம்மால் முடியுமா என்ற அச்சம் கொள்ளக் கூடாது.
    ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறும்போது கடந்த ஆண்டு படித்த புத்தகங்களை பாதுகாத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றையும் படிக்க வேண்டும். அதன்மூலம் நினைவாற்றல் மேம்படுவதுடன் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெல்ல உதவியாக இருக்கும். தாய் தந்தையர் மற்றும் ஆசிரியர்களை மதிக்க கற்றுக்கொண்டால் வானம் வசப்படும், எதையும் சாதிக்கலாம் என்றார். இந்நிகழ்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் பிச்சமுத்து, நகர்நல ஆர்வலர் அட்லஸ். நாச்சிமுத்து, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai