Enable Javscript for better performance
இளைஞர் எழுச்சி தினம் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், நாட்டின் விடுதலைக்காகவும் பாடுபட்ட பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23-ஆம் தேதியை (வெள்ளிக்கிழமை) இளைஞர் எழுச்சி தினமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கடைப்பிடித்தனர். இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கரூர் பேருந்து நிலையம் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் இளைஞர் எழுச்சி தின கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினர் அரவிந்தன் தலைமை வகித்தார். குழு உறுப்பினர்கள் ராஜேந்திர பிரசாத், மணி, உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஆங்கில ஏகாபத்தியத்திற்காக எதிராக போராடிய பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரின் சாதனைகள், தேசப்பற்று குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai