Enable Javscript for better performance
கரூரில் நாளை ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) ரஜினி மக்கள் மன்றத்தின் கரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ராமகிருஷ்ணபுரத்தில் மாவட்டச் செயலாளர் கே.எஸ். ராஜா தலைமையில் நடைபெற உள்ளது.
    கூட்டத்தில் மாட்ட இணைச் செயலாளர் ப.சிவானந்தம்,துணைச் செயலாளர்கள் கீதம் சி.ரவி, கே.என். ஜவஹர், டிகே.லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
    கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.பாலகுமார், குபேரன் பி.ரமேஷ், டிசி.மதன், எஸ்.கோபி உள்ளிட்ட ரசிகர்கள் மன்றத்தினர் திரளாக பங்கேற்கிறார்கள்.
    முன்னதாக மன்ற அலுவலகத்தில் இருந்து நரசிம்மபுரம் வழியாக ஊர்வலமாக சென்று லைட்கவுஸ்கார்னரில் உள்ள காந்தி சிலைக்கும், பஸ்நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai