Enable Javscript for better performance
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாதமுதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத முதியவர் சாவு

    By DIN  |   Published on : 24th March 2018 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புன்னம்சத்திரத்தில் சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    புன்னம்சத்திரத்தில் ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் ஒரு தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சாலையோரம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் வெள்ளிக்கிழமை காலை மயங்கிய நிலையில் கிடந்தார்.
    தகவலின்பேரில், வேலையும்தபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் வெள்ளை வேஷ்டி அணிந்திருந்தார். சட்டை அணியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் குருநாதன் வழக்குப் பதிந்து, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai