Enable Javscript for better performance
வீட்டினுள் தனியாக இருந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்த 2 பேர் சிக்கினர்- Dinamani

சுடச்சுட

    

    வீட்டினுள் தனியாக இருந்த பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்த 2 பேர் சிக்கினர்

    By DIN  |   Published on : 24th March 2018 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூரில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
    கரூர் காந்தி கிராமம், ஜெஜெ கார்டனைச் சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி லதா (30). வெள்ளிக்கிழமை மாலை இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இரு இளைஞர்கள் லதாவை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பியோடினர். லதாவின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த 2 இளைஞர்களை துரத்தி பிடித்து, பசுபதிபாளையம் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மூவராக வந்ததாகவும், ஒருவர் தப்பியோடி விட்டதாகவும் கூறினர். புகாரின்பேரில், போலீஸார் அந்த 2 பேரையும் கைது செய்து, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai