Enable Javscript for better performance
அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் 12 உயர் மின் கோபுரங்கள்- Dinamani

சுடச்சுட

    

    அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில்  12 உயர் மின் கோபுரங்கள்

    By DIN  |   Published on : 31st March 2018 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூரில் சேலம் மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க  6 இடங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
    கரூரில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் இரவுகளில் விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. இதனால் அந்த இடங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைத்து விபத்துகளைத் தடுக்க இடம் தேர்வு செய்யும் பணி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 
    கரூர் கோடங்கிப்பட்டி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியது: கரூரில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக கோடங்கிப்பட்டி, மண்மங்கலம் பகுதி உள்ளிட்ட 6 இடங்களில் போக்குவரத்து துறையின் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் தலா ரூ. 50 லட்சத்தில் 12 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணை மூலம் போக்குவரத்து சிக்னல்கள் இந்த இடங்களில் அமைக்க ஆவன செய்யப்படும் என்றார் அமைச்சர்.
    ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் எஸ்.கவிதா, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் எஸ்.திருவிகா, விசிகே. ஜெயராஜ், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai