Enable Javscript for better performance
கரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    கரூர் வட்டாட்சியர் அருள் இலங்கை அகதிகள் முகாம் வட்டாட்சியராகவும், மண்மங்கலம் வட்டாட்சியர் ராம்குமார் ஆட்சியர் அலுவலக மேலாளர்(பொது) இடத்திற்கும், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் பாலசுந்தரம் அரவக்குறிச்சி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 
    அரவக்குறிச்சி வட்டாட்சியர் சந்திரசேகர் ஆட்சியரகப் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராகவும், அரவக்குறிச்சி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மூர்த்தி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 
    ஆட்சியரக மேலாளர் (பொது) உதயகுமார் குளித்தலை கோட்ட கலால் அலுவலராகவும், குளித்தலை ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சிவகுமார் ஆட்சியரக மேலாளர்(குற்றவியல்) இடத்திற்கும், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார் கிருஷ்ணகுமார் வட்டாட்சியராகவும், இலங்கை அகதிகள் முகாம் தனி வட்டாட்சியர் கற்பகம் மண்மங்கலம் வட்டாட்சியராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல தனி வட்டாட்சியர் முனிசாமி கிருஷ்ணராயபுரம் சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    கிருஷ்ணராயபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஈஸ்வரன் குளித்தலை வட்டாட்சியராகவும், ஆட்சியரக மேலாளர்(குற்றவியல்) பிரபு அரவக்குறிச்சி வட்டாட்சியராகவும், குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி கரூர் வட்டாட்சியராகவும் , மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மகாமுனி குளித்தலை ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். 
    இதில் குளித்தலை கோட்ட கலால் அலுவலர் கார்த்திகேயன் வரும் 31-ம்தேதி பணி ஓய்வுபெற்ற பிறகு உதயகுமார் பணியேற்க அறிவிக்கப்பட்டுள்ளது. மேலம் சிவகுமார், சுரேஷ்குமார் ஆகியோருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பணிமாறுதல் உத்தரவு இதன் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai