Enable Javscript for better performance
கூட்டுறவுத் தேர்தல்: வழக்குத் தொடர முடிவு- Dinamani

சுடச்சுட

    

    சத்துணவுப் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் முறைகேடான தேர்தலை ரத்து செய்திட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 
    கரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட அவசர செயற்குழுக்கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் இரா. மாரிமுத்து தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அனைத்து சத்துணவுப் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயக் கடன் சங்கத்துக்கு கடந்த 26-ம் தேதி நடந்த நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் அதிகாரி சோபன்ராஜ் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட 11 உறுப்பினர்களின் வேட்புமனுக்களை பெற்று அதற்கான ஒப்புகை ரசீதை மாலை 5 மணிக்கு வழங்குவதாக கூறிவிட்டு சீட்டு வழங்காமல் பின்பக்க வழியாக சுவர் ஏறிக் குதித்து சென்று விட்டார்.
    பின்னர் இவரது முறைகேடான செயலைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், உயர் அதிகாரிகளுக்கு இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரியும், முறையான தேர்தலை நடத்திடக் கோரியும் மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளர்,  மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.  சட்டத்திற்குப் புறம்பாக தேர்வு செய்யப்பட்டு ஆளுங்கட்சிக்காரர்களே அலுவலகத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்து ஒட்டியிருப்பது கண்டனத்திற்குரியது. 
    இச் செயலைக் கண்டிக்கும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    முன்னதாக கூட்டத்தில் கோரிக்கை குறித்து மாவட்டச் செயலர் எம். சுந்தரம் விளக்கினார். மாவட்ட துணைத் தலைவர் எம். பாஸ்கரன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சக்திவேல் சிறப்புரையாற்றினார். பொருளாளர் கே. சிவகாமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai