Enable Javscript for better performance
தாந்தோணிமலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல், பூக்குழி இறங்கும் விழா: நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தாந்தோணிமலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல், பூக்குழி இறங்கும் விழா: நாளை தொடக்கம்

    By DIN  |   Published on : 31st March 2018 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும்  பூக்குழி இறங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை  தொடங்குகிறது. 
    விழாவையொட்டி காலையில் அமராவதி ஆற்றில் இருந்து மாரியம்மனுக்கு கம்பம் பாலித்து வந்து கோயில் முன் நடப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 6-ம் தேதி பூச்சொரிதல் விழாவும், 9-ம் தேதி பூக்குழி திறப்பு நிகழ்ச்சியும், 10-ம்தேதி காலை பக்தர்கள் பூக்குழி இறங்குதல், 12-ம் தேதி மாவிளக்கு கொண்டு வருதல், கம்பம் ஆற்றுக்கு விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 15-ம் தேதி ஊஞ்சல் மண்டகப்படியுடன் விழா முடிகிறது.
    விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைக்காரர் செல்வராஜ், தனக்காரர் சண்முகம், ஊர் கொத்துக்காரர் எஸ். ராம்குமார் ஆகியோர் செய்கிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai