Enable Javscript for better performance
தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புனித வெள்ளி என்னும் பெரிய வெள்ளியில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்புள்ள 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்வர்கள் அனுசரிக்கிறார்கள். 
    நிகழாண்டிற்கான தவக்காலம் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கியது. இந்த தவக்காலங்களில் ஒரு வேளை உண்ணா நோன்பு கடைப்பிடித்து ஜெப வழிபாட்டில் ஈடுபடுவர்.  இயேசு சிலுவையில் அறைவதற்கு முன் ஒரு வாரத்தை புனிதவாரமாகவும் கடைப்பிடிக்கிறார்கள்.  
    முதல் நாளான ஞாயிறு (கடந்த 25-ம் தேதி) அன்று குருத்தோலை ஞாயிறு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 
    இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் பெரிய வெள்ளி என்னும் புனித வெள்ளி தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
    கரூர் புனித தெரசம்மாள் ஆலயம்,  சர்ச் கார்னர் சிஎஸ்ஐ ஆலயம், பசுபதிபாளையம் புனித கார்மல் ஆலயம், புலியூர் குழந்தை ஏசு திருத்தலம், வேலாயுதும்பாளையம் புனித அந்தோனியார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
     கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் சிறப்பு வழிபாடு காலை 9 மணிக்குத் தொடங்கியது. 
    இதில் இயேசு கிறிஸ்து பிலாத்து மன்னன் முன் நிறுத்தப்பட்டு, அவருக்கு சிலுவையில் அறைய தண்டனை வழங்குதல்,  பின்னர் சிலுவையை சுமந்து செல்லும் போது அவர் படும் துன்பங்கள், சிலுவையில் அறையப்படுதல், பின்னர் அவர் உயிரை விடும்போது, இவர்கள் செய்யும் பிழையை மன்னியும் என தனது தந்தையிடம் வேண்டுதல், அவரது உடல் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுதல் போன்ற 14 நிலைகளில் சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.  
    தொடர்ந்து வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழும் நாளான ஏப்.1-ம்தேதி ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai