Enable Javscript for better performance
புங்கம்பாடிசாலையில் மதுக்கடை அமைக்க  பொதுமக்கள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    புங்கம்பாடிசாலையில் மதுக்கடை அமைக்க  பொதுமக்கள் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புங்கம்பாடி சாலையில் அரசு மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புங்கம்பாடி சாலை பகுதியைச் சேர்ந்த ராவ்ஜிநகர், எஸ்பி.நகர், காந்தி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அண்மையில் அளித்த மனு: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி புங்கம்பாடி சாலையில் நங்காஞ்சி ஆற்று பாலத்துக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அரசு மதுபானக்கடை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்த இடத்தில் இருந்த பழையக் மதுக்கடை பொதுமக்கள் எதிர்ப்பால் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் கடை அமைக்கப்பட்டால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே இந்த பகுதியில் புதிய மதுக்கடை அமைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai