Enable Javscript for better performance
இடி, மின்னல் காற்றுடன் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் இடி, மின்னல் மற்றும்  காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. 
    தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
    அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் (மே 4) தொடங்கியது முதலே அவ்வப்போது கரூர் மாவட்டத்தில் கோடை மழை பெய்து பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  
    கரூரில் வழக்கம்போல வியாழக்கிழமை காலை வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. பின்னர் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வெயில் சுட்டெரித்தது. 
    சுமார் 5.50 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டன. குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. 
    பிறகு சிறிது நேரத்திலேயே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்றினால் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அரசியல் கட்சியினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் காற்றில் சிறிது தூரம் பறந்து சென்று விழுந்தன. 
    சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியதால் திருக்காம்புலியூர் ரவுண்டானா,  திருமாநிலையூர் ரவுண்டானா, லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, தாந்தோணிமலை கணபதிபாளையம் வடக்கு வழி, தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல தேங்கியது. 
    இதனால் வாகன ஓட்டிகள் ஊர்ந்தவாறு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். 

    ஆலங்கட்டி மழை 
    கரூரை அடுத்த புலியூர், உப்பிடமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்துள்ளது. இந்த ஆலங்கட்டிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் சேகரித்தனர்.

    குளிர் சாதனங்கள்  தீப்பிடித்தன
     கரூர் அண்ணாநகர் மேற்கு, அம்சவேணி அபார்ட்மெண்டில் உள்ள லோகேஸ்வரன்(45) என்பவரது வீட்டுக்குள் இருந்த ஏ.சி, வாஷிங் மெஷின் இடி, மின்னல் தாக்கியதில் தீப்பிடித்தன. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai