Enable Javscript for better performance
ஓடும் பேருந்தில்  பெண்ணிடம்  நகை பை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து நகை பையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ஜெயந்தி(45). இவர் புதன்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருக்காம்புலியூருக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். அவர் கையில் 3 சவரன் நகை இருந்த நகை பையுடன் ஏறியுள்ளார். பின்னர் அவர் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது நகை பையைக் காணவில்லையாம். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிந்து நகை பையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai