Enable Javscript for better performance
கத்தியைக் காட்டி மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் கத்தியைக்காட்டி மிரட்டி மூதாட்டியிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
     கரூர் நத்தமேடு அடுத்த ஆத்தூரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி கொளந்தாயி (50). இவர், புதன்கிழமை மாலை கரூர் ஜவஹர் பஜாருக்குச் செல்ல கரூர் - ஈரோடு சாலையில் ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கொளந்தாயியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai